பழனியப்பா பிரதர்ஸ் - ஒரு பார்வை

1941ஆம் ஆண்டில் திரு செ.மெ.பழனியப்ப செட்டியார் அவர்களால் திருச்சியில் தொடங்கப் பெற்றது பழனியப்பா பிரதர்ஸ். நிறுவனரின் அயரா உழைப்பாலும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையாலும் வானுற ஓங்கி வளம் பெறத் திகழ்கிறது பழனியப்பா பிரதர்ஸ்.

கரந்தை கவியரசின் 'செந்தமிழ் கட்டுரைகள்' என்னும் முதல் நூலில் தொடங்கி 1000க்கும் மேற்பட்ட நூல்களை, அகராதி, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, திறனாய்வு, குழந்தை இலக்கியம் எனப் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டுள்ளது. முக்கியமாக குழந்நை நூல்களை படங்களுடன் அதிக அளவில் வெளியிட்டு, பல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை இதற்கு உண்டு.

புகழ் பெற்ற எழுத்தாளர்களான பண்டிதமணி, ரா.பி.சேதுப்பிள்ளை, ஐயன் மெருமாள் கோனர், நாமக்கல் கவிஞர், ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, மதுரை முதலியார், ஜி. வரதராஜன் ஆகியோரின் நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

திருமந்திரம், திருவாசகம், திருக்குறள், கந்தருனுபூதி, அபிராமி அந்தாதி, எழுதுவது எப்படி, கோனார் அகராதி, நாட்டுக்கு உழைத்த நல்லவர் வரிசை, அறிவியல் அரிஞர் வரிசை, பால்ஸ் ஆங்கில - ஆங்கில - தமிழ் மற்றும் தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதிகள், கம்ப்யூட்டர் இயக்க முறைகள் ஆகியன பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கன.

மானவர் மத்தியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக புகழ் பெற்று விளங்கும் 'கோனார் தமிழ் உரை'யைத் தயாரித்து வெளியிட்டு வரும் பதிப்பகம் பழனியப்பா பிரதர்ஸே ஆகும்.

மாறி வரும் கணிணி யுகத்திற்கேற்ப மின் பதிப்புகளையும், குறுவட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. இதில் புகழ் பெற்ற பால்ஸ் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் மற்றும் தமிழ் - தமிழ் - ஆங்கில மின் அகராதிகள் குறிப்பிடத் தக்கவை.

சென்னையில் தலைமை அலுவலகம் கொண்ட பழனியப்பா பிரதர்ஸுக்கு திருச்சி, சேலம், கோயமுத்தூர், மதுரை, ஈரோடு ஆகிய ஊர்களில் கிளைகள் இயங்கி வருகின்றன.